உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 13 மாவட்டங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்

13 மாவட்டங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்

மதுரை:'லஞ்சம் தலைவிரித்தாடுவதால், '5வது தூண்' அமைப்பின் கிளை அமைக்க வேண்டும்,' என, 13 மாவட்டங்களைச் சேர்ந்தோர் விருப்பம் தெரிவித்தனர். மக்களாட்சியை சீர்குலைக்கும் அரக்கனாக லஞ்சம், ஊழல் உள்ளது. இதிலிருந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எதிராக போராடவும் '5வது தூண்' அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மதுரையில் நடந்த புவிவெப்ப மயமாக்குதலுக்கு எதிரான மாநாட்டில், 5வது தூண் சார்பில் 'ஸ்டால்' அமைக்கப்பட்டது. 'நாம் வசிக்கும் பகுதியில் லஞ்ச, ஊழல் புகார்,' இருந்தால் கருத்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 13 மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். 'தங்கள் பகுதியில் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம் இருப்பதாக,' கருத்து தெரிவித்தனர். 'தங்கள் பகுதியில் '5வது தூண்' கிளை அமைக்க 35 பகுதியை சேர்ந்தோர் விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கை பரிசீலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. '5வது தூண்' அமைப்பின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி கூறியதாவது: விருதுநகர், திருநெல்வேலி, சேலம், ஏற்காடு உள்ளிட்ட பல பகுதியில் 5வது தூண் கிளை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். விதிமுறைகள் நிறைய இருப்பதால், கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.ஊழலுக்கு எதிராக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்துவது, லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுப்பது போன்றவை 5வது தூண் கிளை மூலம் மேற்கொள்ளப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை