உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போராட்டத்தில் பேராசிரியர்கள் பாடமின்றி மாணவர்கள் பாதிப்பு

போராட்டத்தில் பேராசிரியர்கள் பாடமின்றி மாணவர்கள் பாதிப்பு

மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து அலுவலர்கள் நடத்திய மூன்றாவது நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் பேராசிரியர்களும் பங்கேற்றனர். இதனால் பெரும்பாலான வகுப்புகள் நடக்கவில்லை. மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.இப்பல்கலையில் நிலவும் நிதிப்பிரச்னை காரணமாக அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. பல்கலை நிர்வாகம் மாநில அரசை உரிய முறையில் அணுகி பிரச்னையை தீர்க்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிப்., 14 முதல் பல்கலையில் உள்ள 74 துறைகளில் அலுவலகங்களை மூடி 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.நேற்று பேராசிரியர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பேராசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். தவிர, அரசு ஊழியர்கள் சங்கம், அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசினர். போராட்டத்தால் பல்கலை அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான வகுப்புகளும் நடக்காததால், மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை