| ADDED : டிச 31, 2025 06:11 AM
மதுரை: இந்திய மருத்துவ சங்க மதுரை கிளைத் தலைவராக டாக்டர் ராஜிவ் அய்யப்பன் பொறுப்பேற்றார். மதுரை கிளையின் புத்தாண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது. முதல் பிரதியை மதுரை மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார் வெளியிட, அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் பெற்றார். நாட்காட்டி குழுத்தலைவர் டாக்டர் விஜயரத்தினம் கவுரவிக்கப்பட்டார். மாநிலக் கிளை பெண் மருத்துவர்கள் பிரிவு செயலாளராக டாக்டர் ஆனந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர்கள் அழகவெங்கடேசன், மகாலிங்கம்,அரவிந்த், விஜயசங்கரன், மீனம்பாள், ஆனந்தி, ஜெயராஜ் பங்கேற்றனர்.