உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் சுரேஷிடம், பா.ஜ., இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல்முருகன், இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா மாவட்ட தலைவர் சக்கிவேல் மனுக்கள் அளித்தனர்.பா.ஜ.,வினர் மனுவில், ''பல நுாறு ஆண்டுகளாக கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் சுவாமி வீதி உலாவின்போது, சன்னதி தெருவிலுள்ள 16கால் மண்டபத்திற்குள் செல்வது வழக்கம். சில ஆண்டுகளாக 16கால் மண்டபம் அருகே மேடை அமைத்து சுவாமியை மண்டபத்தின் பக்கவாட்டில் கொண்டு செல்வது வேதனை அளிக்கிறது. வரும் காலங்களில் 16கால் மண்டபத்திற்குள் சுவாமி வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.அனுமன் சேனா மனுவில், ''திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாட்டின் போது கோயில் யானை முன்னே செல்வது வழக்கம். யானை தெய்வானை புத்துணர்வு முகாம் சென்றுள்ளதால், வாடகைக்கு யானையை வரவழைத்து திருவிழாவில் பங்கேற்க செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி