உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆண்டு முழுவதும் போட்டி நடத்த ஜல்லிக்கட்டு பேரவை தீர்மானம்

 ஆண்டு முழுவதும் போட்டி நடத்த ஜல்லிக்கட்டு பேரவை தீர்மானம்

மதுரை: 'அலங்காநல்லுார் கீழக்கரையில் மாதம் 2 போட்டிகள் வீதம், ஆண்டு முழுவதும் போட்டிகள் நடத்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடந்தது. பேரவையின் வளர்ச்சி, நிர்வாகம் கருதி அதன் தலைவருக்கு ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சு விரட்டு நடக்கும் அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை தேர்வு செய்யும் சிறப்பு அதிகாரம் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு காப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சமீபகாலமாக மறுக்கின்றன. இந்நிலையில் உயிரிழப்பு ஏற்படும் நிகழ்வுகளில் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்ட முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் மூர்த்திக்கு நன்றி. ஜல்லிக்கட்டு வாடிவாசல் ஆடுகளத்தின் பரப்பளவை குறைந்தபட்சம் 200 சதுரமீட்டராக நிர்ணயித்து உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். மஞ்சு விரட்டு போட்டியை நடத்த தகுந்த விதிமுறைகளை வகுத்து ஆணையிட வேண்டும். அலங்காநல்லுார் கீழக்கரையில் மாதம் 2 போட்டிகள் வீதம், ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். அனைத்து மாவட்ட கிராம மக்களும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் வகையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை