நொண்டி சோனை சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மேலரத வீதி செக்கடி பெரிய கருப்பு, வெள்ளச்சி அம்மன், மொட்டைய சுவாமி, நொண்டி சோனை சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணிகள் முடிந்து டிச.7ல் அனுக்ஞை பூஜை, மகா ஹோமம், மகாலட்சுமி பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு மூலவர்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.