உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லட்சுமி தீர்த்தகுளம் சீரமைப்பு: விரைந்து முடிக்க உத்தரவு

லட்சுமி தீர்த்தகுளம் சீரமைப்பு: விரைந்து முடிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் லட்சுமி தீர்த்த குளத்தின் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி ஒப்பந்ததாரருக்கு கோயில் துணை கமிஷனர் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.இக்குளத்தின் உள்பகுதியில் கருங்கற்களால் கட்டப்பட்ட சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. அதனை ரூ. 6.50 கோடியில் சீரமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்டில் துவங்கியது. பணிகள் துவங்கியதும் தொடர்ந்து 2 மாதங்கள் மழை பெய்ததால் பணிகள் தடைப்பட்டது.கோயில் துணைக் கமிஷனர் சுரேஷ் கூறுகையில், ''லட்சுமி தீர்த்த குளத்தின் உள்பகுதி முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. எனவே பழமை மாறாமல் கருங்கற்களாலேயே கட்டப்படுகிறது. லட்சுமி தீர்த்த குளத்தின் சீரமைப்பு பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்த பின்பே கோயில் கும்பாபிஷேக பணிகள் துவங்க உள்ளது. அதனால் கூடுதல் பணியாளர்களை நியமித்து சீரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தியுள்ளோம். சில நாட்களாக பணிகள் துவங்கி நடக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை