உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போலீஸ் ஸ்டேஷன்களை அதிகரிக்க கோரி வழக்கு

 போலீஸ் ஸ்டேஷன்களை அதிகரிக்க கோரி வழக்கு

மதுரை: மதுரையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தவில்லை. இதனால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. மக்கள்தொகைக்கு ஏற்ப போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மத்திய, மாநில உள்துறை செயலர்கள், டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது.மனுதாரர், 'இது தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை,' என்றார். நீதிபதிகள்,'அப்படியெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம். வழக்கு முடிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை