உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல்லையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

நெல்லையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி: திருநெல்வேலி வி. எம். சத்திரம் அருகே ஆரோக்கியநாதபுரத்தில் ஒரு தரப்பினர் நிலத்தை பிளாட்களாக மாற்ற இயந்திரங்கள் மூலம் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நிலம் தமக்குரியது என கூறும் இன்னொரு தரப்பினர் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் அங்கிருந்த வழக்கறிஞர் சரவணராஜன் 32, என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.கழுத்தில் பலத்த காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு இறந்தார். அதே சம்பவத்தில் சாம் எனும் இன்னொரு வழக்கறிஞருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இறந்த சரவணராஜன் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே புளியங்குளத்தை சேர்ந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ