உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிலிம் டிவிஷனில் பணி கோரிய மனு : மத்திய அரசுக்கு டிரிபியூனல் உத்தரவு

பிலிம் டிவிஷனில் பணி கோரிய மனு : மத்திய அரசுக்கு டிரிபியூனல் உத்தரவு

மதுரை : மும்பை மத்திய அரசின் பிலிம் டிவிஷனில் கருணை அடிப்படையில் பணி கோரும் மதுரை வாலிபரின் மனுவை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர், டிவிஷன் நிர்வாக அதிகாரிக்கு மத்திய நிர்வாக டிரிபியூனல் உத்தரவிட்டது.

மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த ப.வெங்கடேஷ் தாக்கல் செய்த மனு: தந்தை பன்னீர்செல்வம் மும்பை மத்திய அரசின் பிலிம் டிவிஷனலில் கணக்காளாராக பணிபுரிந்தார். 1996 மே 25ல் அவர் இறந்தார். கருணை அடிப்படையில் பணி கோரி பிலிம் டிவிஷன் நிர்வாக அதிகாரிக்கு 1996 ஜூலை 19ல் மனு செய்தேன். 2004 வரை பணி வழங்கவில்லை. டிரிபியூனலில் மனு செய்தேன். மனுவை பரிசீலிக்கும்படி டிரிபியூனல் உத்தரவிட்டது. மனுவை பரிசீலித்த பிலிம் டிவிஷன் நிர்வாக அதிகாரி, காலியிடங்கள் இல்லை என்பது போன்ற காரணங்களை கூறி, நிராகரித்து விட்டார். அந்த காரணங்கள் தவறானவை. ஆறு பேர் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே எனக்கும் பணி வழங்கும்படி தகவல் ஒளிபரப்பு துறை, பிலிம் டிவிஷன் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த மத்திய நிர்வாக டிரிபியூனல் உறுப்பினர் சோசம்மா உத்தரவில், ''மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களில் ஆறு பேர் நியமனம் செய்யப்பட்டது தெரிகிறது. பிலிம் டிவிஷனலில் 116 காலியிடங்கள் உள்ளன. மனுதாரர் மனுவை நிராகரித்ததை ஏற்க இயலாது. பணி கோரும் மனுதாரர் மனுவை மீண்டும் பரிசீலனை செய்து, இரு மாதங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என மத்திய தகவல் ஒளிபரப்பு செயலாளர், டிவிஷன் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி