உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை எம்.பி., வெங்கடேசன் தற்குறி பா.ஜ., இளைஞரணி தலைவர் காட்டம்

மதுரை எம்.பி., வெங்கடேசன் தற்குறி பா.ஜ., இளைஞரணி தலைவர் காட்டம்

திருப்பரங்குன்றம்:''திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை எம்.பி., வெங்கடேசன் போன்ற தற்குறிகளை பேச அனுமதிப்பது மோசமானது'' என பா.ஜ., இளைஞரணி மாநில தலைவர் சூர்யா தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை மஹா தீபம் ஏற்ற வேண்டும் என்கிற ஹிந்து அமைப்பினர், பா.ஜ., தொடர் போராட்டத்திற்கு வெற்றியாக நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது கண்டிக்கத்தக்கது. தீபத்துாணில் தீபத்தை ஏற்ற விடாமல் தடுக்க தி.மு.க., சதி செய்கிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டியது தான் தி.மு.க., அரசின் கடமை. மதுரை எம்.பி., வெங்கடேசன் கார்த்திகை தீபமா, கலவர தீபமா என கேட்டது கண்டிக்கத்தக்கது. வேறு மத புனித நிகழ்வை இவ்வாறு கொச்சைப்படுத்த அவருக்கு திராணி உள்ளதா. 1996ல் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து பேசியதால் அவர் விரட்டி அடிக்கப்பட்டார். கவுன்சிலர் லீலாவதியை கொலை செய்த தி.மு.க.,வின் காலில் விழுந்து ஓட்டுப் பிச்சை எடுத்த வெங்கடேசன், மதுரை மக்களின் பிரதிநிதி என்று சொல்ல உரிமை இல்லை. தி.மு.க., மூத்த தலைவர்களே எங்களுக்கு போன் செய்து வெங்கடேசன் குறித்து புலம்புகிறார்கள். தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள், அமைச்சர்களை கேள்வி கேட்க வெங்கடேசனுக்கு திராணி இருக்கிறதா. வெங்கடேசன் போன்ற தற்குறிகளை இதுபோன்று பேச அனுமதிப்பது மோசமானது. இது தி.மு.க., விற்கு ஹிந்து வெறுப்பை சம்பாதித்து கொடுக்கும். தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்ப்பதில் பா.ஜ.,வினரை விட அதிக அக்கறை கொண்டிருப்பது தி.மு.க., தான். உறங்கிக் கொண்டிருக்கும் ஹிந்துக்களை ஹிந்து எதிர்ப்பு அரசியல் செய்து எழுப்பும் வேலையை தி.மு.க., அரசு மிக கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஹிந்து வெறுப்பு அரசியலை செய்ய வேண்டும். அப்போதுதான் இங்கே இருக்கும் ஹிந்துக்களும் சங்கிகளாக மாறுவார்கள். தி.மு.க., வை ஆட்சியில் இருந்து அகற்றி விரட்டுவார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை