உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அறநிலையத் துறை அதிகாரிகள்பணிதேர்வில் வினாத்தாள் அவுட்?

அறநிலையத் துறை அதிகாரிகள்பணிதேர்வில் வினாத்தாள் அவுட்?

மதுரை:மதுரையில் நேற்று நடந்த இந்து அறநிலையத்துறை அதிகாரி பதவிக்கான தேர்வில் வினாத்தாள் 'அவுட்' ஆனதாக பரபரப்பு எழுந்தது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில் இத்துறைக்கு 9 உதவி கமிஷனர்களை நியமனம் செய்ய சென்னை, கோவை, மதுரையில் தேர்வு நடந்தது. இதில் சட்டப் பட்டதாரிகள் பங்கேற்றனர். மதுரையில் மீனாட்சி கல்லூரி மையத்தில் தேர்வாளர்களுக்கு அறை எண் 15ல் வினாத்தாள் வழங்கினர். முன்னதாக 2 பேரிடம் கையெழுத்தும் பெறப்பட்டது. அப்போது 2 வினாத்தாள்கள் லேசாக சேதமடைந்து இருந்துள்ளன. அறையில் இருந்தவர்கள் வினாத்தாள் 'அவுட்' ஆகிவிட்டது எனக்கூறி தேர்வு எழுத மறுத்தனர்.அவர்கள் கூறுகையில், ''எங்களை வெளியே செல்லவிடாமல் போலீஸ் மூலம் தேர்வு அறைக்குள் இருக்கச் செய்தனர். தேர்வு நேரம் முடிந்தபின் வெளியேற்றினர். தேர்வறை கண்காணிப்பாளர்களும் வினாத்தாள் சேதமடைந்ததாக எழுதிக் கொடுத்துள்ளனர். தேர்வை ரத்து செய்ய வேண்டும்,'' என்றனர்.வினாத்தாள் அவுட் ஆனதா என டி.ஆர்.ஓ., முருகேஷ் விசாரணை நடத்தினார். அவர் கூறியதாவது: வினாத்தாள் கவர் சீல் வைத்து இருந்தது. அதில் சேதம் இல்லை. வேறு மாநிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. கட்டுக்களை வாகனங்களில் கொண்டு வருகையில் சேதமடைந்து இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. தேர்வாளர்கள் தேர்வை எழுதி விட்டனர்,'' என்றார்.டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து, ''வினாத்தாள் குறித்து டி.ஆர்.ஓ., விசாரித்து தகவல் அனுப்ப கேட்டு கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி