உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறுமியை பாலியல்தொந்தரவு செய்தவர் கைது

சிறுமியை பாலியல்தொந்தரவு செய்தவர் கைது

அவனியாபுரம்:மதுரை அவனியாபுரத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குபேந்திரன், 32. இவர் சாயப்பட்டறை தொழிலாளி. அப்பகுதியில் வீட்டின்முன் விளையாடிய மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது சிறுமியை, குபேந்திரன் பாலியல் தொந்தரவு செய்தார். சிறுமி அலறியதால், அப்பகுதியினர் குபேந்திரனை பிடித்து அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை