உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ரயில்வே கோட்டம் விரைவில் நூறு சதவீதம் மின்மயமாக்கப்படும்

மதுரை ரயில்வே கோட்டம் விரைவில் நூறு சதவீதம் மின்மயமாக்கப்படும்

மதுரை,: மதுரையில் ரயில்வே மைாதானத்தில் கோட்ட மேலாளர் ஸ்ரீ ஷரத் வஸ்தவா கொடியை ஏற்றி அவர் கூறியதாவது:கடந்தாண்டை விட இந்தாண்டு 11.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளோம். கடந்தாண்டு ரூ.800 கோடி, இந்தாண்டுரூ. 894 கோடி வர்த்தகம் நடந்துள்ளது.சரக்கு ரயில் மூலம் 17.67 சதவீதம் வளர்ச்சி யடைந்துள்ளது. அதன் வருவாய் ரூ.285 கோடியாக உள்ளது. பயணிகளை பொறுத்தவரையிலும், டிசம்பர் வரை 8.79 மில்லியன் உயர்ந்துள்ளது. இதன்மூலம் ரூ.541 கோடி வருவாயை ஈட்டியுள்ளோம்.மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. விருதுநகர், காரைக்குடி, மணப்பாறை, பரமக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், கோவில்பட்டி, ராஜபாளையம், தென்காசி, அம்பாச முத்திரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, புனலூர், பழநி, திருச்செந்தூர், சோழவந்தான் உள்ளிட்ட 15 ஸ்டேஷன்கள்ளில் அம்ருத் பாரத் திட்டத்தில் பணி நடக்கிறது. இதுவரை 16.75 கி.மீ., பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது, இது கோட்டத்தில் மின்மயமாக்கப்பட்ட மொத்த மின்மயமான 1,295 கிலோ மீட்டரில் 85 சதவீதம் மதுரை- - போடி 90 கி.மீ., இடையேயான பணி மார்ச் 2024க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம்- - ராமேஸ்வரம் பிரிவு (53 கி.மீ.) முடிந்த பிறகு, கோட்டம் 100 சதவீத மின்மயமாக்கல் இலக்கை எட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ