மஹா பெரியவர் ஆராதனை விழா
மதுரை : காஞ்சி காமகோடி சந்திர சேகரேந்திர சரஸ்வதி மஹா பெரியவரின் ஆராதனை விழா மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் சார்பில் எஸ்.எஸ். காலனியில் நடந்தது.விக்ரஹம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு அபிேஷகம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ருத்ரா அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து வேதாச்சாரியார்களின் வேதமந்திரம் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு கலச புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் விக்ரஹத்துக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை செய்யப்பட்டது. நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினரின் ஆண்டாள் கல்யாணம், நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.