மேலும் செய்திகள்
மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
22-Jun-2025
மதுரை : மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த மாணிக்க வாசகர் குருபூஜை விழாவில், மாணவர்களுக்கு திருவிளையாடல் புராண போட்டிக்கான பரிசு வழங்கப்பட்டது.மதுரை தருமபுரம் ஆதினம் சொக்கநாதர் மண்டபத்தில் திருவாசக பாராயணத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை வகித்த பேராசிரியர் அம்பை மணிவண்ணன், திருவிளையாடல் புராணத்தின் சிறப்புகளை பேசினார். தியாகராஜர் கல்லுாரி உதவி பேராசிரியர் எழில் பரமகுரு, ஆன்மிக நன்னெறி வகுப்புகள் தலைவர் முருகேசன் சைவ சமயத்தின் அவசியம் பற்றி பேசினர்.போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, பரிசுகளை முன்னாள் ரயில்வே அமைப்பாளர் சங்கரநாராயணன், டாக்டர் சேகர் வழங்கினார்கள். ஏற்பாடுகளை தலைவர் சந்திரசேகரன், செயலாளர் கண்ணன் செய்தனர். ராமர் நன்றி கூறினார்.
22-Jun-2025