உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்களை சந்திக்காதவர்களே பா.ஜ., வளர்ந்துள்ளதாக பேசுவர் கார்த்தி மீது மாணிக்கம் தாகூர் சாடல்

மக்களை சந்திக்காதவர்களே பா.ஜ., வளர்ந்துள்ளதாக பேசுவர் கார்த்தி மீது மாணிக்கம் தாகூர் சாடல்

திருநகர் : ''மக்களை சந்திக்காதவர்களே பா.ஜ., வளர்ந்துவிட்டதாக பேசுவர்'' என, கார்த்தி எம்.பி.,யை விருதுநகர் எம்.பி., மாணிக்தாகூர் சாடியுள்ளார்.மதுரை திருநகரில் அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது.மாநில தலைவராக செல்வப் பெருந்தகை சிறப்பாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சியிலும் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.வடமாநில பத்திரிகைகளை நம்பி பா.ஜ., வளர்ச்சி பெற்று உள்ளது என கார்த்திக் பேசுகிறார். மக்களை சந்திக்காதவர்கள் பேசும் பேச்சு இது. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துக்களில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர், ரூ. 10 லட்சம் நிதி வழங்க வேண்டும். கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.,வின் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவிடம் பேசி உள்ளனர். சுமுகமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. விருதுநகர் தொகுதியை தி.மு.க., கேட்டால் கொடுப்பீர்களா என கேட்கிறீர்கள். 'இண்டியா' கூட்டணியில் சேர்ந்து பயணிக்கிறோம். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர, தனிநபரின் விருப்பு, வெறுப்புகள் அல்ல, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ