உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அமைச்சருடன் சந்திப்பு

 அமைச்சருடன் சந்திப்பு

வாடிப்பட்டி: மதுரை மேற்கு தொகுதி பரவை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள ஏ.ஐ.பி.இ.ஏ., நகர் பி.காலனி, பவர் ஹவுஸ், சொக்கர் நகர், அபி கார்டன், முத்து நாயகி நகர் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்களை அமைச்சர் மூர்த்தி சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ஊர்மெச்சிகுளம் பால்பண்ணை நகர் சந்தன மாரியம்மன் கோயில் முன் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட தகர கூரையை அமைச்சர் திறந்து வைத்தார். தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், ஒன்றிய, நகர செயலாளர்கள் சிறைச்செல்வன், ராசாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்