உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேற்கு தொகுதி நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை

மேற்கு தொகுதி நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை

மதுரை : மதுரையில் தி.மு.க., மாவட்டம் பிரிக்கப்பட்ட பின் நகர் செயலாளர் தளபதி கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு சட்டசபை தொகுதி அமைச்சர் மூர்த்திக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து விளாங்குடியில் மேற்கு தொகுதி நிர்வாகிகளை மூர்த்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் நகர் துணை செயலாளர்கள், பகுதி, வட்டச் செயலாளர் உட்பட அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் அமைச்சர் கூறியதாவது: என்னை நம்பி இத்தொகுதியை முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். அவரது நம்பிக்கையை காப்பாற்றுவேன். பிப்., 23 ல் இத்தொகுதிக்கான பொது உறுப்பினர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. அதில் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்படும் என்றார்.

புஷ் ஆன எதிர்ப்பு

நகர் செயலாளர் தளபதியை 'டம்மி'யாக்கும் வகையில் அவருக்கு கீழ் இருந்த மேற்கு தொகுதியை தலைமை மாற்றியுள்ளதால் எதிர்ப்பு கிளம்பியதாகவும், கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.மேலும் குறிப்பிட்ட நிர்வாகிகள் சிலர் கட்சி தலைமையிடம் சென்று மீண்டும் நகர் பகுதியில் மேற்கு தொகுதியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி அழைப்பு விடுத்த கூட்டத்தை பலர் புறக்கணிக்கத் திட்டமிட்ட நிலையில், கடைசி நேரத்தில் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை