உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நவீன ரோந்து வாகனங்கள்

நவீன ரோந்து வாகனங்கள்

மதுரை: மதுரை நகரில் நவீன போலீஸ் ரோந்து வாகனங்களை கமிஷனர் லோகநாதன் துவக்கி வைத்தார். சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்துப்பிரிவு போலீசார் பயன்பாட்டிற்காக நவீன கேமரா, ஆயுதம் ஏந்திய 8 புதிய டூவீலர்கள், நெருக்கடியான இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் 2 மீட்பு வாகனங்கள், அதிரடிப்படைக்கு கேமராவுடன் கூடிய 3 ஜீப்கள், ரோந்து பணிக்காக சில ஜீப்கள் உட்பட20 ரோந்து வாகனங்களை துவக்கி வைத்தார். துணை கமிஷனர்கள் வனிதா, திருமலைக்குமார், உதவி கமிஷனர்கள் பெத்துராஜ், செல்வன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை