உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கல்லுாரியில் தேசிய அறிவியல் தொழில்நுட்ப, நிர்வாகவியல் அமர்வு

 கல்லுாரியில் தேசிய அறிவியல் தொழில்நுட்ப, நிர்வாகவியல் அமர்வு

மதுரை: மதுரை யாதவர் கல்லுாரியில் தேசிய அளவிலான அறிவியல், தொழில் நுட்பம், நிர்வாக வியல், பொதுநலன் மாநாட்டின் தொழில்நுட்ப அமர்வுகள் நேற்று நடந்தன. அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, முன்னேற்றத்தின் எதிர் காலத்தை வடிவமைக்கும் புது முன்னெடுப்புகளைப் பற்றி விவாதிப்பது, உலகம் முழுவதுமுள்ள ஆராய்ச்சியாளர்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் மாநாடு நடக்கிறது. நேற்று நடந்த தொழில்நுட்ப அமர்வில் பாடத் திட்டக்குழுத் தலைவர் அழகப்பன் தொழில்நுட்ப அமர்வு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மொரீஷியஸ் அமிட்டி உயர்கல்வி நிறுவன டீன் ஆஷிஷ் கடேகர் 'உயர் கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, தீமைகள்' என்ற தலைப்பில் பேசினார். பொருளாதாரம், வணிக அறிவியல் துறை ஆராய்ச்சி பேராசிரியர் ராஜேஷ் ரஞ்சன் 'நிலையான வளர்ச்சி' என்ற தலைப்பில் பேசினார். தேசிய சுகாதார, குடும்ப நலத்துறையின் புள்ளிவிவரக் குழு செயல்தலைவர் தர்மேந்திர யாதவ், ''இந்தியாவில் தைராய்டு கோளாறு, பெண்களின் வயதிற்கேற்ப மாறும் என்ற புள்ளிவிவர தகவல்களை பகுப்பாய்வு செய்து வழங்கினார். கருத்தரங்க மாநாடு தொடக்க விழா இன்று (டிச.27)நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை