வெங்காய மார்க்கெட் கட்டுமான பணி ஆய்வு
மதுரை: மதுரை வண்டியூர் கண்மாயை அழகுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்காக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் மாநகராட்சியில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது.இதில் கண்மாய் படுகையை பலப்படுத்துதல், படகு சவாரி அமைத்தல், கண்மாயின் மேற்கு, வடக்கு பகுதியில் சைக்கிளிங் பாதை அமைத்தல், நடைபயிற்சி பாதை அமைத்தல், யோகா மையம், தியான மையம், சிற்றுண்டி, நுாலகம், குழந்தைகள், முதியோர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீருற்று, ஆம்பி தியேட்டர், ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகுபந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன.இவற்றை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா ஆய்வு செய்தனர்.தொடர்ந்து வார்டு 33 சார்பில் மாட்டுத்தாவணி அருகில் ரூ.10.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வெங்காய மார்க்கெட் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர். மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, உதவி கமிஷனர் மணியன், பி.ஆர்.ஓ. மகேஸ்வரன், செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கியசேவியர், காமராஜ், உதவி பொறியாளர்கள் அமர்தீப், கண்ணன், கவுன்சிலர் மாலதி கலந்து கொண்டனர்.