மேலும் செய்திகள்
சிட்டி ஸ்போர்ட்ஸ்: சி.பி.எஸ்.இ., சிலம்பப் போட்டி
23-Jul-2025
மதுரை; சிவகங்கையில் நடந்த மாநில அளவிலான ஓப்பன் சிலம்பப் போட்டியில் 750 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மதுரை அம்பிகை நாராயணன், போசா விளையாட்டு வளாக மாணவர்கள் வெற்றி பெற்றனர். ஒற்றை கம்பு பிரிவில் சிவதரன், சிபின், மாமலைவாசன், துருவபாலா, நரேந்திரா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். நவீன், தயா, பத்ரிநாத், சஸ்வந்த், ஸ்ரீருதிரவேல்,லேஜ்வந்தன் புவியரசு, கிரித்திக் 2ம் பரிசும், லேவின், கனிஷ்கா, விமலேஷ் 3ம் பரிசு பெற்றனர். இரட்டை கம்பு பிரிவில் கண்மணி, அஸ்மிதா, சஞ்சய்ராஜன் முதல் பரிசும், ஹர்ஷினி 2ம் பரிசும் பெற்றனர். தொடுமுறை போட்டியில் செந்துாரன், ஹரிஷ், மாமலைவாசன், ஸ்ரீஹரிநிஸ்வந், சிக்கிதரன் முதல் பரிசும், குருதர்ஷன், பிரதிஷ், முத்துகவினன், ஸ்ரீசுக்கிர்தன், ஜெயசுதன், பிரசன்னா, அஸ்வின் 2ம் பரிசும் பரணிதரன், பொன்னாபரணன் 3ம் பரிசும் வென்றனர். ஓப்பன் ஆண்கள் பிரிவில் மணிமாறன், பெண்கள் பிரிவில் மெமினாபெகம் முதல் பரிசும் வென்றனர். வளாகத்தலைவர்கள் சுந்தரக்கண்ணன், சரவணன், ஜான் சந்திரமோகன், செயலாளர் கவுரிசங்கர், பயிற்சியாளர் கார்த்திகேயன் பாராட்டினர்.
23-Jul-2025