உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழிலாளர்கள் பயிற்சி பெற வாய்ப்பு

தொழிலாளர்கள் பயிற்சி பெற வாய்ப்பு

மதுரை : மதுரையில் தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர கட்டுமானத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என உதவி கமிஷனர் பாரி தெரிவித்து உள்ளார். அவர் தெரிவித்ததாவது: கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துநர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பன்டரி, பார்பென்டிங் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படும். முதற்கட்டமாக 1600 தொழிலாளர்களுக்கு செக்கானுாரணி, கே.புதுார் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செப்.15 முதல் 21 வரை பயிற்சி நடக்க உள்ளது. பங்கேற்போருக்கு தினமும் ரூ.800 ஊக்கத் தொகை, உணவிற்கு ரூ.150 வழங்கப்படும். தகுதியுள்ள தொழிலாளர்கள் விருப்ப கடிதத்தை மதுரை எல்லீஸ்நகர் வீட்டுவசதி வாரிய வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை