| ADDED : ஜன 04, 2024 02:35 AM
பாண்டியராஜபுரம் மாணவன் தேர்வுவாடிப்பட்டி: பஞ்சாபில் அடுத்த வாரம் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில் பங்குபெறும் தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு ராமநாதபுரம் மற்றும் சேலத்தில் நடந்தது. இதில் பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை பள்ளி 12ம் வகுப்பு மாணவர் கெனித் இதயன், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் தேர்வு செய்யப்பட்டார். மாணவன், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜா, செந்தில்குமார், சுரேஷ் ஆகியோரை தலைமை ஆசிரியர் விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பஞ்சவர்ணம், ஆசிரியர்கள் பாராட்டினர்.மாநில கையுந்து பந்து போட்டிஅழகர்கோவில்: கள்ளழகர் கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள சுந்தரராஜா உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு மாநில கையுந்து பந்து போட்டி துவங்கியது. மதுரை, ஈரோடு, சென்னை, திண்டுக்கல் போலீஸ், அஞ்சல்துறை மகளிரணி, 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவியர் கலந்து கொள்கின்றனர். நாளை(ஜன.,5) வரை போட்டி நடக்கிறது. நேற்று வீராங்கனைகள் பாரம்பரிய கலைகளுடன் வரவேற்கப்பட்டனர். ஏற்பாடுகளை துணைகமிஷனர் ராமசாமி செய்திருந்தார்