உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பெயர்ந்து விழும் சிமென்ட் பூச்சு அச்சத்தில் தவிக்கும் நோயாளிகள்

 பெயர்ந்து விழும் சிமென்ட் பூச்சு அச்சத்தில் தவிக்கும் நோயாளிகள்

மேலுார்: பூதமங்கலத்தில் சிதிலமடைந்த கட்டடத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இக்கிராமத்தில் 52 வருடங்களாக செயல்படும் சுகாதார நிலையத்தில் பூதமங்கலம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 18 கிராம மக்கள், கர்ப்பிணிகளுக்கு மாதாந்திர சோதனை, தொடர் கவனிப்பு, வளர் இளம் பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி, அனைத்து விதமான நோய்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பது என பணிகள் நடக்கிறது. இம் மையம் சிதிலமடைந்த கட்டடத்தில் செயல்படுவது வேதனைக்குரியதே. இதனால் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதி பொதுமக்களில் சிலர் கூறியதாவது: கட்டடச் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து காணப்படுகின்றன. சிமென்ட் பூச்சுகள் திடீரென உடைந்து விழுகிறது. அதனால் அச்சத்துடனே மையத்துக்கு வந்து செல்கிறோம். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் கிடையாது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து உயிர் பலி ஏற்படுமுன் நிலையத்தை மராமத்து பார்க்க வேண்டும் என்றனர். மருத்துவ அலுவலர் சண்முக பெருமாள் கூறுகையில், 'இந்தாண்டு துணை சுகாதார நிலையம் மராமத்து பார்க்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ