மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
25-Oct-2025
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டிவேல் தலைமை வகித்தார். செயலாளர் சுப்புராமன் வரவேற்றார். மண்டல செயலாளர் ராமச்சந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் சுரேந்திரன், கவுரவ ஆலோசகர் வேலுமயில், மகளிர் அணித்தலைவி வாசுகி முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ஜெயபாலன், முன்னாள் துணைத் தலைவர் கருப்பையா, கருவூலத்துறை பாலசுப்ரமணியன் உட்பட பலர் பேசினர். வயது 70 பூர்த்தியடைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட பொருளாளர் காளிமுத்து நன்றி கூறினார்.
25-Oct-2025