முதல்வர் திட்ட முகாமில் மனு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் நகராட்சி வார்டுகள் 1, 2 பகுதி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. நகராட்சி துணைத்தலைவர் தேன்மொழி, ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் பாலசுப்பிரமணியன், நகராட்சி கமிஷனர் இளவரசன், அதிகாரிகள் பங்கேற்றனர். தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் பார்வையிட்டு, மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மேலுார்
புதுசுக்காம்பட்டி முகாமிற்கு துணை கலெக்டர் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., சங்கீதா முன்னிலை வகித்தார். 13 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 650 மனுக்களை பெற்றனர். தாசில்தார்கள் செந்தாமரை, லயனல் ராஜ்குமார், பி.டி.ஓ., சுந்தரசாமி பங்கேற்றனர்.