உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு கவிதை போட்டிகள்

மாணவர்களுக்கு கவிதை போட்டிகள்

மதுரை: மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடக்கிறது.மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு ஜன. 21 ல் பள்ளி, ஜன. 22 ல் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. மேல்நிலை மாணவர்கள், ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம், 3 மாணவர்கள் பங்கேற்கலாம்.மாணவர்கள் பயிலும் பள்ளி, கல்லுாரி தலைமையாசிரியர் ஒப்புதலுடன் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல், மின்னஞ்சல் மூலமோ (gmail.com) ஜன. 20 க்குள் தகவல் அனுப்பலாம். முதல் பரிசு ரூ. 10ஆயிரம், 2ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3ம் பரிசு ரூ. 5ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு வெல்வோர் மாநில அளவில் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை