மேலும் செய்திகள்
பொன்னேரியில் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
09-Jan-2025
ஒரு சென்ட் நிலத்திற்காக பெண் கொலைபேரையூர்: தெற்குத் தெரு ஆறுமுகத்தாய் 55. கட்டடத் தொழிலாளி. மாரியப்பன் என்பவருடன் திருமணமானது. குழந்தை இல்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 30 ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர். ஆறுமுகத்தாய் பெயரில் பேரையூர் அருகே பாப்புரெட்டிப்பட்டியில் ஒரு சென்ட் நிலம் உள்ளது.இந்த நிலத்தை உறவினரான பாப்பிரெட்டிபட்டி மாசானம், ஆறுமுகத்தாயிடம் விலைக்கு கேட்டுள்ளார். இடத்தை விற்க விருப்பம் இல்லை என்று ஆறுமுகத்தாய் சொல்லிவிட்டார். இதன்பின் பாப்புரெட்டிபட்டி மாசானம் 30, கணேஷ்குமார் 29, தாண்டவன் 36, பெரியசிட்டுபட்டி லிங்கப்பன் 37, ஆகியோர் ஜன.16 ல் ஆறுமுகத்தாய் வீட்டுக்குச் சென்று அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ. ஒரு லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பினர். நேற்று போலீசார் ஆறுமுகத்தாய் வீட்டுக்குச் சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். கொலை செய்ததற்காக மேற்கண்ட நால்வரையும் கைது செய்தனர்.உண்டியல் உடைத்தவர் கைதுஅலங்காநல்லுார்: சிக்கந்தர்சாவடி மந்தையம்மன் கோயில் தெரு தனபால் மகன் செல்வம் 27. இவர் நேற்று மது போதையில் அங்கிருந்த மந்தையம்மன் கோயில் உண்டியலை உடைத்துள்ளார். கோயிலுக்கு வந்த பக்தர்களை பார்த்ததும் தப்பினார். அலங்காநல்லுார் போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.டூவீலர் திருட்டு: மூவர் கைதுமதுரை: நகர், புறநகர் பகுதிகளில் டூவீலர் திருட்டுச் சம்பவம் அதிகரித்து வந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட 17 வயதுக்குட்பட்ட மூவரை போலீசார் கைது செய்து 5 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
09-Jan-2025