மேலும் செய்திகள்
சைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி
17-Apr-2025
மதுரை: முனிச்சாலை அருகேயுள்ள சின்ன கண்மாயைச் சேர்ந்தவர் குமார் 31. காமராஜர் ரோட்டில் நிறுத்தியிருந்த இவரது சரக்கு வாகனம் திருடு போனது. நிலக்கோட்டை வழியாக கோவை பகுதிக்கு செல்வது வாகனத்தில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ்., கருவி மூலம் கண்டறியப்பட்டது. திருப்பூர் மாவட்ட போலீசார் 'அலர்ட்' செய்யப்பட்டு, பல்லடத்தில் வாகனம் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக தஞ்சாவூர் ஏழுப்பட்டி முருகன், கோவை காரமடை கண்ணன் 41, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ரூ.பல லட்சத்திற்கு வாகனம் வாங்குவோர் சில ஆயிரம் ரூபாய் செலுத்தி ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது வாகனத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். நகை பறித்தவர் கைது
மதுரை: அவனியாபுரம் நாகப்பா நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது மறைந்திருந்த நபர் வெள்ளி முலாம் பூசப்பட்ட செயினை பறித்துச்சென்றார். இதுதொடர்பான வீடியோ வைரல் ஆனது. இவ்வழக்கில் வலையங்குளம் நல்லுமுருகன் 23, கைது செய்யப்பட்டார். தப்பி ஓட முயற்சித்தபோது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
17-Apr-2025