உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

உசிலம்பட்டி; வகுரணி கிராமத்திற்கு அயோத்திபட்டி, சந்தைப்பட்டி வழியாக கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வருகிறது. ஆனால் மேட்டுப் பகுதியாக உள்ள இக்கிராமத்திற்கு சரியாக வருவதில்லை. சில மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லை என அப்பகுதியினர் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். தீர்வு கிடைக்காததால் உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் கணவாய்கேட்டில் நேற்று மதியம் ஒருமணி நேரம் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. எம்.எல்.ஏ., அய்யப்பன், போலீசார், ஊராட்சி ஒன்றிய கமிஷனர் ராஜா உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை