உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்று பொது வினியோக குறைதீர் முகாம்

இன்று பொது வினியோக குறைதீர் முகாம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொது வினியோகத் திட்ட சேவைகள் குறித்த பொதுமக்களுக்கான குறைதீர் முகாம் இன்று (ஜன.20) நடக்கிறது. தாலுகாக்களில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் தலைமையில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை இம்முகாம் நடைபெறும்.இதில் ரேஷன் கார்டில்பெயர் சேர்த்தல், நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை கோருதல், அலைபேசி எண் பதிவு, அங்கீகார சான்று, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை