உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீனாட்சி அம்மன் கோயிலில் போலி கல்விச்சான்று; 29 பணியாளர்களை சஸ்பெண்ட் செய்ய அறநிலையத்துறைக்கு பரிந்துரை

மீனாட்சி அம்மன் கோயிலில் போலி கல்விச்சான்று; 29 பணியாளர்களை சஸ்பெண்ட் செய்ய அறநிலையத்துறைக்கு பரிந்துரை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலி கல்விச்சான்று கொடுத்து பணிபுரியும் 29 பேரை 'சஸ்பெண்ட்' செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு அறங்காவலர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பள்ளி கல்விச்சான்று அடிப்படையில் பணியில் பலர் சேர்க்கப்பட்டனர். இதில் சேவுகர் பணியில் இருந்த ஒருவரின் 10ம் வகுப்பு கல்விச்சான்று போலி என தெரியவந்ததை தொடர்ந்து அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இதுபோல் மேலும் இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பணியில் சேர்ந்த அனைவரின் கல்விச்சான்றுகளின் உண்மை தன்மையை கண்டறிந்ததில் 29 பேர் போலி கல்விச்சான்று கொடுத்தது தெரிந்தது. இவர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மீது பல மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட 29 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. நேற்று அறங்காவலர்கள் குழுக்கூட்டம் கோயில் வளாகத்தில் நடந்தது. இதில் திருப்பணிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைதொடர்ந்து போலி கல்விச்சான்று கொடுத்து பணிபுரியும் 29 பேரை 'சஸ்பெண்ட்' செய்ய அறநிலையத்துறைக்கு பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது. ஓரிரு நாளில் கமிஷனர் ஸ்ரீதருக்கு அறங்காவலர்கள் குழு கடிதம் அனுப்ப உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M S RAGHUNATHAN
டிச 01, 2024 20:36

அதில் எத்தனை கிரிப்டோ? Fraudulent செயலுக்கு பணி நீக்கம் தான் சரியாக இருக்கும். ஆனால் ஆணையர் மற்றும் principal secretary ஆகியோர் வாய் திறக்க மாட்டார்கள்.


Anantharaman Srinivasan
டிச 01, 2024 12:56

எல்லாம் கட்சிகாரன் கையூட்டு வாங்கிக்கொண்டு செய்த Appointment ஆகயிருக்கும். அறங்காவலர் குழுவும் உடந்தையோ..? அவர்களுடைய சான்றிதழ்களை ஆய்வு செய்திருக்கவேண்டாமா..?


Anantharaman Srinivasan
டிச 01, 2024 12:50

No சஸ்பெண்ட். Stright away dismiss. Let them approach labour court.


Suresh Kesavan
டிச 01, 2024 08:54

சஸ்பெண்ட் எதுக்கு நேரடியா டிஸ்மிஸ்தானே செய்யணும் ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை