உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முடுவார்பட்டியில் செம்மண் திருட்டு

முடுவார்பட்டியில் செம்மண் திருட்டு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே முடுவார்பட்டியில் ஊர்காவலன் கோயில் கண்மாய் அருகே அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில் மாட்டு வண்டி, டிராக்டர்களில் செம்மண் திருடுகின்றனர். இப்பகுதியில் தினமும் அதிகாலை சிலர் மாட்டு வண்டிகளில் திருடும் மணலை கட்டுமானம் உள்ளிட்ட தேவைகளுக்கு விற்கின்றனர்.இதற்காக பல்வகை மரங்கள் வெட்டப்பட்டும், சேதப்படுத்தபட்டும் உள்ளன. மண்ணின் தன்மைக்கு ஏற்ப 6 முதல் 10 அடி ஆழத்திற்கு மணலை திருட மரங்களை 'சாகடித்துள்ளனர்'. குகைபோல் குடைந்தும் மணல் எடுப்பதால் திருட்டில் ஈடுபட்டவர்கள் மண் சரிவில் சிக்கும் அபாயமும் உள்ளது. வருவாய், கனிம வளத்துறை, போலீசார் கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை