உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஊராட்சிகளில் கொசுக்கடி காய்ச்சல் பரவும் அபாயம்

 ஊராட்சிகளில் கொசுக்கடி காய்ச்சல் பரவும் அபாயம்

பேரையூர்: பேரையூர் வட்டார பகுதிகளில் கொசு உற்பத்தி அதிகரித்து விட்டதால் மக்கள் துாக்கம் இன்றி தவிக்கின்றனர். பேரையூர் தாலுகாவில் சேடபட்டி, டி. கல்லுப்பட்டி ஒன்றியங்களில் 73 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் சாக்கடை கால்வாய்களில் துார் வாராமல் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் ஊராட்சி பகுதியில் வசிப்போர் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். பலர் காய்ச்சலால் மருத்துவமனைக்குச் சென்று வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து உள்ளது. கொசு மருந்து தெளிப்பதில்லை. சாக்கடை கால்வாய்கள் பல மாதங்களாக துார்வாரப்படாமல் உள்ளது. கழிவுகளை முழுமையாக அகற்றாமல், மேலாக கிடக்கும் பாலித்தீன் கவர்களை மட்டும் துப்புரவு பணியாளர்கள் அகற்றுவதால், கால்வாய்க்குள் மண் மேவிக்கிடக்கிறது. தொற்று நோய் பரவும் முன் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகிகள் சிலரிடம் விசாரிக்கையில், ''கடந்த பல மாதங்களாகவே சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான நிதியில்லை'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை