| ADDED : ஜன 11, 2024 04:08 AM
மதுரை, : மதுரையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2ம் நாளான நேற்று மறியலில் ஈடுபட்டதால் 347 பேர் கைதாகினர்.அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதிய பணபலன் வழங்கல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இரண்டாம் நாளான நேற்று மதுரை பைபாஸ் ரோடு மண்டல போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்திரண்டனர். தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் சி.ஐ.டி.யூ., பொதுச் செயலாளர் கனகசுந்தர் தலைமை வகித்தார்.அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ஜெயராஜ், ஏ.ஐ.டி.யூ.சி., நந்தாசிங், பணியாளர் சங்க நிர்வாகி திருமலைச்சாமி, சி.ஐ.டி.யூ., தலைவர் அழகர்சாமி, செயற்குழு உறுப்பினர் குருசாமி உட்பட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டு 347 பேர் கைதாயினர்.அதிகாரிகள் கூறுகையில், இரண்டாம் நாளும் 98 சதவீத பஸ்கள் இயங்கின. இதனால் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை'' என்றனர்.