மேலும் செய்திகள்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
25-Nov-2024
திருப்பரங்குன்றம் : ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இச்சங்க வட்டார கிளை மாநாடு திருப்பரங்குன்றத்தில் நடந்தது. ஒன்றிய கமிஷனர் பேராட்சி பிரேமா கொடியேற்றினார். வட்டார தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் அன்பழகன் துவக்க உரையாற்றினார். வட்டாரக் கிளை செயல்பாடுகள் குறித்து செயலாளர் சுரேஷ், பொருளாளர் தங்கமுத்து விளக்கம் அளித்தனர்.சங்க முன்னோடி வடிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி, தெற்கு வட்ட கிளை தலைவர் பஞ்சவர்ணம், ராமதாஸ் பேசினர். மாவட்டச் செயலாளர் அமுதரசன் அறிமுக உரையாற்றினார். மாவட்ட தலைவர் சந்திரசேகரன் நிறைவு உரையாற்றினார். இணைச் செயலாளர் ராஜாமணி நன்றி கூறினார்.
25-Nov-2024