உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

* வகுப்பறை திறப்பு விழா

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறையை எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் திறந்துவைத்தார். ஊராட்சி தலைவர் ஜபார், கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர் வளர்மதி, முன்னாள் தலைவர் வெற்றிச்செழியன், பி.டி.ஓ., ஜெயபால், வட்டார கல்வி அலுவலர்கள் சாந்தி, ஆரோக்கியராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் அம்பிகாதேவி நன்றி கூறினார்.

* பள்ளியில் வாசகர் கூட்டம்

மதுரை: புதுார் அல்அமீன் பள்ளியில் வாசகர் வட்டக்கூட்டம் அமைப்பாளர் சண்முகவேலு தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். கவிஞர் ரவி எழுதிய 'கட்டுரை களஞ்சியம்' நாவலை முத்துகிருஷ்ணன் மதிப்புரை செய்தார். அனார்கலி, கவிஞர் சுந்தரபாண்டியன், ஆசிரியர் அழகுராஜ், பரமசிவம், சுந்தரகிருஷ்ணன், முதல்வர் கோவிந்தராஜ், மாணவர் தேவராஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் திருஞானசம்மந்தம் நன்றி கூறினார்.

* பள்ளி ஆண்டு விழா

சோழவந்தான்: சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளி ஆண்டுவிழா தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமையில் நடந்தது. முன்னாள் மாணவர் பொறியாளர் காசி, கவுரவ ஆலோசகர் ஆதி பெருமாள், எல்.ஐ.சி., முத்துராமன், அலங்காநல்லுார் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் மனோகரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். உதவி ஆசிரியை பிரேமா அன்னபுஷ்பம் வரவேற்றார். முன்னாள் தலைமை ஆசிரியர் பிராங்க்ளின், ஏ.என்.அதிமூலம், சரஸ்வதி அம்மாள் நினைவாக சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்யபிரகாஷ் வழங்கினர். வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி உட்பட பலர் பங்கேற்றனர். உதவி ஆசிரியை வனிதா சாந்தகுமாரி நன்றி கூறினார்.

* கருத்தரங்கு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி ஆங்கில ஆராய்ச்சி துறை சார்பில் 21ம் நுாற்றாண்டின் ஆங்கில இலக்கியங்கள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் சந்திரன் வரவேற்றார். பேராசிரியர் உமா அறிமுக உரையாற்றினார். அன்னை தெரசா மகளிர் பல்கலை பேராசிரியர் ஜெயப்பிரியா பேசினார். பேராசிரியர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.

* கல்லுாரி ஆண்டு விழா

உசிலம்பட்டி: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரியின் 54ம் ஆண்டு விழா நடந்தது. முதல்வர் அன்பரசு வரவேற்றார். அதிபர் ஜான்பிரகாசம், செயலாளர் அந்தோணிசாமி, இணை முதல்வர் சுந்தரராஜ், துணை முதல்வர் இன்னாசி ஜான் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் டில்லி பல்கலை மானிய ஆணைய இணைச் செயலாளர் கம்பீர் சிங் சவுகான் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். 12 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர் மற்றும் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களை கவுரவித்தனர். கலை நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மேரி லொரென்சியா நன்றி கூறினார்.

* மாணவர்களின் கலைக்கூடல்

சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் நுண்கலை மன்றம் சார்பில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலாளர் சுவாமி வேதாந்த குலபதி அத்யாத்மனந்தா, மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு முன்னிலை வகித்தனர். மன்ற ஒருங்கிணைப்பாளர் அருள் மாறன் வரவேற்றார். முன்னாள் மாணவர் முத்துமாணிக்கம் பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள் மாணிக்கவாசகர், யுதிஷ்டிரன் தொகுத்து வழங்கினர். குருகுல கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன், ரகு, காமாட்சி, பிரேமானந்தம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பேராசிரியர் எல்லைராஜா நன்றி கூறினார்.

* கணித கருத்தரங்கு

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி கணிதத்துறை சார்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். முதல்வர் ராமசுப்பையா முன்னிலை வகித்தார். கணிதத்துறை தலைவர் ஹமாரி சவுதி வரவேற்றார். புதுச்சேரி ராமானுஜம் பல்கலை பேராசிரியர் ராஜேஸ்வரி சேஷாத்திரி, சரஸ்வதி நாராயணன் கல்லுாரி பேராசிரியர் வில்சன் பாஸ்கர், காந்தி கிராம பல்கலை பேராசிரியர் உதயகுமார் பேசினர். 60 பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியர்கள் ஆண்டாள், சுமதி ஏற்பாடுகள் செய்தனர்.

* மாநில அளவில் முதலிடம்

மதுரை: தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற செயின்ட் மேரீஸ் பள்ளியின் 72 மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாணவர் ஸ்ரீராம் முதலிடம், இளஞ்செழியன் 2ம் இடம் பெற்றனர். நிகழ்ச்சிக்கு பள்ளி அதிபர் மரியநாதன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மேலுார் மாவட்டக் கல்வி அலுவலர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். மாணவர்கள் யுவராஜா, திவாகர் வரவேற்றனர். எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன் பங்கேற்றனர். கவுன்சிலர் விஜயலட்சுமி, தாளாளர் ஸ்டீபன் லுார்து பிரகாசம், முன்னாள் மாணவர் இயக்கத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேலம் லொயோலா கல்லுாரி செயலாளர் ஆல்பர்ட் வில்லியம் பங்கேற்றார். தலைமை ஆசிரியர் சேவியர் ராஜ் நன்றி கூறினார்.

* அறிவியல் கண்காட்சி

மதுரை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மதுரை கே.எல்.என்., பொறியியல் கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பேராசிரியர் பார்த்தசாரதி வரவேற்றார். தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். முதல்வர் ராம் பிரசாத், மதுரை பிராண்ட் ஆட்டோமேஷன் உரிமையாளர் குமார், திருமலை பேக்ஸ் உரிமையாளர் அஜய், மகேஷ் எலக்ட்ரானிக் நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார் பேசினர். பேராசிரியர் சுபாஷினி நன்றி கூறினார்.

* வளாகத் தேர்வு

மதுரை: கே.எல்.என். பாலிடெக்னிக் கல்லுாரியில் 2024ம் ஆண்டு சிவில் பிரிவு மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடந்தது. நிறுவன அதிகாரிகள் ஷண்முகராஜா, ஜெயபாரத், உதயகுமார் தேர்வினை நடத்தினர். 48 மாணவர்களில் 18 பேர் தேர்வாகினர். செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை முதல்வர் சகாதேவன், துறை தலைவர் மதனவல்லி ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி