மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான சிலம்பப் போட்டி மதுரையில் நடந்தது. இதில் கே.ஏ.சி.ஏ. அருணாச்சலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஏழாம் வகுப்பு அஜிதா முதல் பரிசு, பிளஸ் 1 மாணவி நம்பித்தேவி 2ம் பரிசு, பத்தாம் வகுப்பு ஹேமப்ரியா, தனுஷ்பாரதி, ஒன்பதாம் வகுப்பு அன்பரசன் 3ம் பரிசு பெற்றனர். அஜிதா மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதி பெற்றார்.தலைமையாசிரியை வாசுகி, நிர்வாக அலுவலர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் மதன் தேவராஜ், சாய் சிலம்பம் அகாடமி பயிற்சியாளர் சுந்தர்ராஜ் பாராட்டினர்.
27-Jan-2025