உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண் போலீசாருக்கான திறன் மேம்பாடு பயிற்சி

பெண் போலீசாருக்கான திறன் மேம்பாடு பயிற்சி

மதுரை : மதுரை இடையப்பட்டி போலீஸ் பயிற்சிப்பள்ளியில் 2ம் நிலை கான்ஸ்டபிள் முதல் சிறப்பு எஸ்.ஐ., வரை பணிபுரியும் பெண் போலீசாருக்கான 3 நாள் திறன் மேம்பாட்டுப்பயிற்சி நடந்தது. பயிற்சிப்பள்ளி முதல்வர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., பால்பாண்டி முன்னிலை வகித்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வது, பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க, நீதி வழங்க அமைக்கப்பட்ட 'விசாகா கமிட்டி'யின் செயல்பாடுகள், எப்.ஐ.ஆர்., பதிவுக்கு பின் பெண் போலீசாரின் பங்கு, போக்சோ சட்டத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து துறை வல்லுனர்கள் பயிற்சி வழங்கினர். மாவட்ட இளைஞர் நீதிக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, இளைஞர் நீதிச்சட்டம் குறித்து பயிற்சி அளித்தார். மதுரை நகர், புறநகர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 88 பெண் போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை