உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைதிகளுக்கு சிறுதானிய உணவு பயிற்சி

கைதிகளுக்கு சிறுதானிய உணவு பயிற்சி

மதுரை : மதுரை நபார்டு வங்கி நிதி உதவியுடன் சாஜர் அறக்கட்டளை மூலம் மதுரை சிறை கைதிகள் 25 பேருக்கு சிறுதானியத்தில் மதிப்பு கூட்டிய உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நேற்று துவங்கியது.அறக்கட்டளை தலைவர் ஜாஸ்மின் வரவேற்றார். டி.ஐ.ஜி., பழனி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் சதீஷ் குமார் துவக்கி வைத்தார். வங்கி கோட்ட வளர்ச்சி மேலாளர் சக்தி பாலன் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். கே.ஆர்.எஸ்., மருத்துவமனை மனிதவள மேலாளர் திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.சி.இ.ஓ., நஷீம் பானு நன்றி கூறினார்.கம்பு, கேழ்வரகு, குதிரை வாலி, தினை, வரகு, சாமை உட்பட பல்வேறு குறு சிறு தானியங்களில் அதிரசம் முறுக்கு, பேக்கரி, இனிப்பு வகை பொருட்கள் தயாரிக்க 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி