மண் பரிசோதனை அவசியம்
மதுரை: மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மண் சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக மண்வள தின விழா நடந்தது. துறைத்தலைவர் கிறிஸ்டி நிர்மலா மேரி பேசுகையில், மண் பரிசோதனையே மண்வள மேலாண்மையை காக்கும் ரகசியம். பரிசோதனை அடிப்படையில் மண்ணுக்கு தேவையான உரங்களை மட்டும் இட்டு பயிர் மகசூலை பெருக்குவதுடன் மண்ணையும் வளமாக்க வேண்டும்'' என்றார். இணைப் பேராசிரியர் ஜெயபாலகிருஷ்ணன் அங்கக வேளாண் இடுபொருட்களின் பயன்களையும் பேராசிரியர் முருகராகவன் மண் வகைகளும் பல்லுயிர் பெருக்கம் குறித்தும் விளக்கினர். விவசாயிகளுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மலா மண்வள அட்டை வழங்கினார். இணைப் பேராசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.