உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டவருக்கு சிறப்பு பஸ்

ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டவருக்கு சிறப்பு பஸ்

மதுரை : மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் ஜன. 15, 16ல் வெளிநாட்டு பயணிகள் ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல்விழாவை காண சுற்றுலா அலுவலகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: ஜன.15 அலங்காநல்லுார்கீழக்கரையில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏழு தழுவுதல் அரங்கத்தில்உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக பொங்கல் விழா நடத்தப்படுகிறது. வெளிநாட்டு பயணிகளை சுற்றுலா அலுவலகத்தில் இருந்து காலை 8:00 மணிக்கு சிறப்பு பஸ்கள் மூலம் அரங்கத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி ஊர்வலம் செல்லலாம். தொடர்ந்து பரதம், பாரம்பரிய விளையாட்டுப் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை