உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரயில் மோதியதில் கை துண்டான மாணவி பலி

 ரயில் மோதியதில் கை துண்டான மாணவி பலி

மதுரை: மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனுாருக்கு தினமும் காலையில் பாசஞ்சர் ரயில் செல்கிறது. மதுரையில் காலை 8:25 மணிக்கு புறப்பட்டு, காலை 10:15 மணிக்குபோடியை அடைகிறது. கடந்த நவ.15 காலையில் புறப்பட்ட அந்த ரயில் பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே, சோனை கருப்பு என்பவரது மகள் சோனியா 17, என்பவர் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த சோனியாவுக்கு இடது கை துண்டானது. அக்கம் பக்கத்தவர்கள் ரயில்வே போலீசார் உதவியுடன், அப்பெண்ணை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !