உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர் படைப்புகள் போட்டி

மாணவர் படைப்புகள் போட்டி

மதுரை : மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களின் செயல்திட்ட படைப்புகளுக்கான போட்டி '3 இடியட்ஸ்' என்ற தலைப்பில் நடந்தது. ஒவ்வொரு அணியிலும் பொறியியல் படிப்பின் வெவ்வேறு பிரிவை சேர்ந்த தலா 3 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய படைப்புகளை சமர்ப்பித்தனர். கல்லுாரி முதல்வர் அல்லி தலைமை வகித்தார். டீன் வாசுகி வரவேற்றார். போட்டி குறித்து முதுநிலை முதல்வர் சுரேஷ்குமார் விளக்கி பேசினார். போட்டியின் சாராம்சம் குறித்து உதவி பேராசிரியர் ஸ்வேதிதா விளக்கினார். எஸ்.ஏ. நிட்வேர் மேலாண் இயக்குநர் நவாஸ் பாபு சிறப்புரையாற்றினார்.மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டன. பரிசுக்குரிய அணிகளை வேலம்மாள் கல்லுாரி இயந்திரவியல் துறை தலைவர் அன்புமலர், காக்னிசன்ட் நிறுவன அதிகாரி கவுதம் தேர்வு செய்தனர். முதல்பரிசை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி அணியும், இரண்டாம் பரிசை கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை மதுரை நிப்பான் நிறுவனர் தினேஷ்குமார் அளித்தார்.உதவி பேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி கணினி அறிவியல் பிரிவு தலைவர் தீபாலட்சுமி, உதவி பேராசிரியர் பாலமுரளிகிருஷ்ணா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை