உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிப்பால் அவதி

ஆக்கிரமிப்பால் அவதி

கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே கல்லணையில் வால குருநாதர் சாமி கோயில் உள்ளது. இதனருகே 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அரசு புறம்போக்கு இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதால் 20 வீடுகளை சேர்ந்த மக்கள் பாதையின்றி தவிக்கின்றனர். ஆக்கிரமிப்பு இடத்தில்ஊராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டி, மின் கம்பங்கள் உள்ளன. இதனால் தண்ணீர் தொட்டியை இயக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகமும் தவித்து வருகிறது.இதுகுறித்து தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ