மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
மதுரை: மதுரை பைகாராவில் ஆசிரியர் தினவிழா மதுரைக் கல்லுாரி பொருளாதாரத் துறை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், துாய்மை விழிகள் அறக்கட்டளையின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கொண்டாடப்பட்டது. பொருளாளர் முத்து வரவேற்றார். பொருளாதாரத் துறைத் தலைவர் தீனதயாளன் தலைமை வகித்தார். ஓய்வு ஆசிரியர் நுார்ஜஹான் பேசுகையில், 'எல்லோரையும் உருவாக்கும் சிற்பி ஆசிரியர்கள். மரத்தின் வேர் போன்றவர்கள். வேர் பலமாக இருந்தால் தான், மரத்தில் பூக்கள் மணமுள்ளதாகவும் வசீகரிக்கும் வகையிலும் இருக்கும்' என்றார். நிறுவனர் வேல்முருகன், கல்லுாரி செயற்குழு உறுப்பினர் அமுதன், மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் சதாசிவம், சங்கச் செயலாளர் முத்துப்பாண்டி பேசினர். துணைத் தலைவர் சந்திரலேகா நன்றி கூறினார். துணைச் செயலாளர் அசோக்குமார் ஏற்பாடு செய்தார். வாடிப்பட்டி: பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப்பள்ளியில் செயலாளர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். பள்ளி குழுத் தலைவர் தனபால் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வெங்கடலட்சுமி வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஆசீர்வாதம் பீட்டர் ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் எஸ்தார் டார்த்தி, பரமசிவன் நன்றி கூறினர்.
16-Aug-2025