உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் இதழால் கிடைத்தது தீர்வு

தினமலர் இதழால் கிடைத்தது தீர்வு

மேலுார்: கீழையூர் பெரியாற்று கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கரும்பு, வாழை, நெல் பயிரிட்ட நிலங்களுக்குள் தண்ணீர் தேங்கியது. அதனால் பயிர்கள் அழுகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக செயற்பொறியாளர் சிவபிரபாகர் தலைமையில் ஊழியர்கள் கால்வாயை மராமத்து பார்த்து தண்ணீர்வீணாக வெளியேறியதை நிறுத்தினர். இக்கால்வாய்வழியாக தென்மா கண்மாய்க்கு தண்ணீரை நிரப்ப வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !