உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கள்ளக்காதலன் தலையில் கல்லை போட்ட பெண்

கள்ளக்காதலன் தலையில் கல்லை போட்ட பெண்

வாடிப்பட்டி: மதுரை வண்டியூர் பொன்ராம் மகன் அரவிந்த் சரத் 33. இவர் 2019ல் சிவகங்கை மாவட்டம் தேன்மொழியை காதல் திருமணம் செய்து 5 வயதில் மகள் உள்ள நிலையில் மனைவியை பிரிந்தார். பின் தன்னுடன் கட்டட வேலைபார்த்த மணிகண்டன் மனைவி பூபதியுடன் 29, பழகி வந்தார். இதை கண்டித்த பூபதியின் அண்ணன் வாசுதேவனை கொலை செய்தார். சில மாதங்களாக அதலை பகுதியில் இரு மகள்களுடன் இருவரும் வசித்து வந்தனர். பூபதி நடத்தையில் அரவிந்த்சரத் சந்தேகப்பட்டு மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து தாக்கி வந்துள்ளார். செப்.17 இரவு துாங்கிக்கொண்டிருந்த அரவிந்த் தலையில் பூபதி கல்லை துாக்கி போட்டார். பலத்த காயமடைந்த அரவிந்த் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். சமயநல்லுார் போலீசார் பூபதியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை